tamilnadu

கோவை கொடிசியாவில் ஜூலை 19 முதல் 28 வரை புத்தக கண்காட்சி

 கோவை, ஜூலை 16- கோவையில் வரும் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் 5வது ஆண்டாக புத்தக திருவிழா கோவை கொடிசியா தொழிற்காட்டி வளாகத்தில் நடை பெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக் கான கட்டுரை போட்டிகளுக்கான பரிசு வழங்குதல், இளம் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, பேச்சு போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், 50 பெண் கவி ஞர்கள் பங்கேற்கும் பெண்பா நிகழ்ச்சியும் நடை பெற உள்ளன. இந்த புத்தக திருவிழாவில் 150 பதிப்பாளர் களின் 250 நூல் விற்பனையகங்கள் இடம் பெற உள்ளன. இது குறித்து கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், கொடிசியா அறிவுக்கேணி என்ற பெயரில் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து 100 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.