tamilnadu

img

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு-ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப். 26- நல்லம்பள்ளி அருகே விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனம் சார்பில் கரூர்  மாவட்டம்  புகழூரிலிருந்து பெங்களூருக்கு  உயர் அழுத்தம் கொண்ட மின்  உயர்கோபுர மின்பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் திட்ட மிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த மின் உயர் கோபுரங்கள் விவ சாய நிலங்களின் வழியே கொண்டு செல்வதற்கு விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், சின்னாகனஅள்ளி, எர்ர பையனஅள்ளி, எச்சனஅள்ளி, பன்னாகனஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால்  தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, புதைவழி தடத்தின் வழி யாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என வலியு றுத்தி வியாழனன்று பன்னாகன அள்ளி கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயி தங்கராஜ் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அந்த பகுதி விவசாயிகள்  ஏராளமானவர்கள் கலந்து கொண் டனர். விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டதை அறிந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களை சம்பவ இடத்திற்கு அனுப்பி  வைத்தது. அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்ட  விவசாயிகளி டம் பேச்சுவார்த்தை நடத்திய தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.