திருப்பூர், நவ. 22- திருப்பூர் மாநகரில் உள்ள அங் கன்வாடி பள்ளிகள் மற்றும் அர சுப் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு சத்துணவுத் திட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட முட் டைகள் கெட்டுப் போயிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிக ளுக்கு, நாமக்கல் மாவட்டத்திலி ருந்து முட்டைகள் கொள்முதல் செய்து கொண்டு வருவது வழக் கம். அதன்படி இந்த வாரம் குழந் தைகளுக்கு வழங்குவதற்காக முட் டைகள் கொண்டு வரப்பட்டிருந் தன. குழந்தைகளுக்கு அவித்து வழங்குவதற்காக இந்த முட்டை களை சத்துணவு மைய சமைய லர்கள் சட்டியில் தண்ணீர் ஊற்றி கழுவுவதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் தண்ணீரில் போடப் பட்ட முட்டைகள் மேலே மிதந்த படி இருந்தன. நல்ல நிலையில் இருக்கும் முட்டைகள் நீருக்குள் மூழ்கிவிடும். ஆனால் நீரில் போடப்பட்ட எல்லா முட்டைக ளும் மிதந்ததால் அவை கெட்டுப் போனவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் சமையலர்க ளுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இது போல் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர், வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அங்கேரிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளிகள் மட்டுமின்றி, திருப்பூர் தென்னம் பாளையம் அரசுப்பள்ளி, காட்டுவளவு, பூம்புகார் மையங் களில் உள்ள அரசு பள்ளிகளிலும் முட்டை கெட்டுப்போனதாக தகவல் வந்தது. இதுபோல் ஆயிரக்கணக்கில் முட்டைகள் கெட்டுப் போயிருந்த நிலையில் திருப்பூர் மாநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு மையங் களில் குழந்தைகளுக்கு இந்த வாரம் முட்டை வழங்குவது நிறுத் தப்பட்டது. இது பற்றி அரசு அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி கெட்டுப்போன முட்டைகள் விநி யோகித்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என குழந்தைகளின் பெற் றோர் வலியுறுத்தி உள்ளனர்.