tamilnadu

கோவையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கோவை, ஆக. 11- கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்களன்று மட்டும் கோவை மாவட்டத்தில் 292 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனால், கோவை மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 972 ஆக இருந்தது.

இந்நிலையில் செவ் வாயன்று மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 296 -ஐ தொட்டது. நாள்தோறும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கோவை மாவட்ட மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.