கோவை, டிச. 7- கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இருப்பிட மருத்துவ அதிகாரிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு விழாக் கள் நடைபெற்றது. கோவை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டு காலம் இருப்பிட மருத்துவ அலுவலராகப் பணியாற்றியவர் (ஆர்எம்ஓ) செளந்திரவேல். இவரின் எளிமையான அணுகுமுறையால் பொதுமக்கள், நோயாளிகளின் அன்பை பெற்றவர். இவருக்கு கோவை மக்கள் மேடையின் சார்பில் வெள்ளியன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, எழுத் தாளர் ச.பாலமுருகன், வழக்கறிஞர் பன் னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோல், கோவையில் உள்ள ஊடகவியலாளர்கள் சார்பில் ஆர்எம்ஓ சௌந்திரவேலுக்கு பாராட்டு விழா சனியன்று கோயமுத்தூர் பத்திரிகை யாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊடகவியாளர்கள் பங் கேற்று இவரின் மருத்துவ சேவை யினை நினைவு கூர்ந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் ஏற்புரையாற்றினார்.