மேட்டுப்பாளையம், செப்.8- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காந் தையாற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கி யது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள லிங்காபுரம் பகுதியில் காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என நான்கு மலையடிவார கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த மக் கள் நகர பகுதிக்கு சென்று திரும்ப லிங்கா புரம் மற்றும் காந்தவயலுக்கும் இடையே ஓடும் காந்தையாறு என்னும் காட்டாற்றை கடந்தாக வேண்டும். நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரி பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த காந்தயாற்றின் வழியாக பவனியாற்றில் கலக்கின்றது.
இந்த காட்டாற்றை நான்கு கிராம மக்க ளும் பரிசல் மூலம் கடந்தே நகரப்பகுதிக ளுக்கு சென்று வந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு காந்தையாற்றின் குறுக்கே பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் இப்பாலம் கட்டப்பட்டது முதல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் நீருக்கடியில் மூழ்குவதும் நீர் மட்டம் குறைந்த பின்னர் வெளி வருவதுமாக உள்ளது. இருபதடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் அமைந்துள்ள இடம் பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி என்ப தால் மொத்தம் 120 அடி நீர்மட்ட கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடக்கும் போதே இப் பாலம் மூழ்க துவங்கிவிடும். இந்நிலை யில் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்யும் மழை காரணமாக மேட்டுப்பாளை யத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளி யேற்றபட்டு பவானிசாகர் அணையை சென்றடைவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 95 அடியை கடந்து 100 அடியை நெருங்கி வருகிறது. இதனால் தற்போது காந்தையாற்று பாலம் மீண்டும் மூழ்க துவங்கிவிட்டது. தண்ணீரில் பாலம் மிதக்கும் நிலையில், அக்கரையில் உள்ள கிராம மக்களுக்கு நகர பகுதியோடு இருந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் மூழ் கிய இப்பாலம் இன்னும் மூன்று நாட்க ளுக்கு மேல் நீருக்கடியிலேயே இருக்கும் என்பதால் அப்பகுதி கிராமமக்கள் மீண் டும் பழையபடி ஆபத்தான வகையில் காட் டாற்றை பரிசல் மூலம் கடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது
. இதனால், பள்ளி செல்லும் குழந்தை கள் மற்றும் விளை பொருட்களை சந் தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகள் போன்றோர் கடும் இன்னலுக்கு ஆளாகி யுள்ளனர். முன்னதாக இப்பாலம் கட்டப் படும் போதே 32 அடி உயரத்தில் கட்ட வலி யுறுதியதாகவும் ஆனால் அதனை ஏற்கா மல் 20 உயரத்தில் கட்டப்பட்டதாலேயே பாலம் பெரும்பாலான மாதங்கள் நீருக்கடி யில் சென்று விடுவதாக இப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாக அதி காரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பாலத்தை புதுப்பித்து உயர்த்தி கட்டுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அடிக்கடி நீருக்குள் மூழ்கி விடும் காந்தையாற்று பாலத்தை உயர்த்தி கட்ட விரைந்து நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.