அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கீரப்பாளையத்தில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம், நவ.12 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்,கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு, போராட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். முக்கியக் கோரிக்கைகள் கீரப்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சமுதாயக் கூடத்தை உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். வடஹரி ராஜபுரம் ஊராட்சியில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகை யில், ஊரின் மையப்பகுதியில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும். பூதங்குடி ஊராட்சி, அள்ளூர் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் மற்றும் சாலை வசதிகளைச் செய்து தர வேண்டும். கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட எண்ணாநகரம், கீழ்நத்தம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செய லாளர் சின்னத்தம்பி, பொருளாளர் கலை வாணன், முன்னாள் மாவட்டப் பொரு ளாளர் சதீஷ்குமார், ஒன்றியப் பொருளாளர் கவியரசன் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் பேசினார்கள். இதில் கீரப்பாளையம் ஒன்றிய த்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க உறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
