tamilnadu

img

சென்னை ஒன் செயலி வழியாக ரூ.1 கட்டணத்தில் மெட்ரோ, ரயில், பேருந்தில் பயணிக்கலாம்

சென்னை ஒன் செயலி வழியாக ரூ.1 கட்டணத்தில் மெட்ரோ, ரயில், பேருந்தில் பயணிக்கலாம்

சென்னை, நவ.13- சென்னை ஒன் செயலிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, வியாழன் முதல் ஒரு சிறப்புச் சலுகை அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சலுகையின்படி, சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் வெறும் ரூ.1 கட்டணத்தில் பயணிக்க லாம். இந்தக் கட்டணத்தை யுபிஐ மூல மாக மட்டுமே செலுத்த முடியும். சென்னையில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் நோக்கில் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் பேருந்து ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஒரே செயலியில் டிக்கெட் எடுக்கும் விதமாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அர சால் ‘சென்னை ஒன்’ செயலி அறிமுகப்  படுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இந்த செயலியை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இதுவரை 8.1 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ரூ.1 சலுகை, தினசரி லட்சக்கணக் கானோர் பயன்படுத்தும் இந்த போக்கு வரத்து சேவைகளுக்கு ஒரு பெரிய சலுகையாகவும், செயலியின் பயன்பாட்டைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயலியை ஆட்டோ, டாக்ஸிகளுக்கும் பயன்படுத்தலாம் என்றாலும், ரூ.1 சலுகை அவற்றுக்கு இல்லை. மேலும், மெட்ரோவில் ஏற்கெனவே பயண அட்டை மற்றும் செயலி பயன்பாட்டில், தொலை வைப் பொறுத்து டிக்கெட் விலையில் தள்ளுபடி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.