உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்கள் மீட்பு முகாம் செங்கல்பட்டில் இன்று நடைபெறுகிறது
செங்கல்பட்டு, நவ.13- நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் சிறப்பு மீட்பு முகாம் வெள்ளியன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தச் சொத்துக்களை மீட்க உதவுவதாகும். இந்திய நிதி அமைச்சகத்தின் வழி காட்டுதலின்படி, இந்த மீட்பு முகாம்கள் அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறு வனங்கள் மற்றும் இதர நிதித் துறைகளின் கிளைகளில் அக்.1 முதல் டிச. 31 வரை தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளன. வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத அல்லது கோரப்படாத வைப்புத் தொகைகள் ரிசர்வ் வங்கியின் DEAF நிதிக்கு மாற்றப்படுகின்றன. பொது மக்கள் இந்தத் தொகைகள் குறித்து வங்கி களின் இணையதளங்கள் அல்லது RBI-யின் UDGAM இணையதளம் ($[https://udgam.rbi.org.in](https://udgam.rbi.org.in)$) மூலம் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமை யாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளைக் கோரிப் பெறலாம்.பொதுமக்கள் தங்க ளது அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் இந்த முகாமில் பங்கேற்று, உரிமை கோரப்படாத தங்களது நிதியை மீட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முகாமில் வங்கி, காப்பீடு மற்றும் நிதி சார்ந்த துறை அலுவலர்கள் ஆலோ சனைகள் வழங்க உள்ளனர்.