tamilnadu

img

பிப்.17இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17இல் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்.17இல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்றும், பிப். 20-ஆம் தேதி 2026-27க்கான முன்பண மானியக் கோரிக்கை 2025-26க்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை அளிக்கப்படும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்த பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.