திருவள்ளூர் அருகில் செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை துரிதமாக கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம் வெள்ளியன்று (ஆக. 30) நடைபெற்றது.கட்சியின் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் இ.மோகனா தலைமையில் தாங்கினார். இதில் கிளை நிர்வாகிகள் சேர்ந்த ஆண்ட்ரியாஸ், விஜியா, வல்லி, கமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.