திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
திருவண்ணாமலை, நவ.13- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காரணம் இன்றி விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட ஊழியர்கள் இருவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஊழி யர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் வார்டு மேனேஜர், சானிடரி டெக்னீ ஷியன், ஆர்த்தோ, டயாலிஸ் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளில் 200க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் வியாழன் அன்று (நவ.13) அதிகாலை மருத்துவமனை ஊழி யர்களான ஏழுமலை, சரவணன் ஆகிய இரு வரையும், உங்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்துள்ளது என்று கூறி, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்களின் வீட்டிற்குச் வியாழனன்று (நவ.13) காலை மருத்துவ மனைக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இது குறித்து கேட்டபோது நிர்வாகம் தரப்பில் முறையான பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மருத்துவமனை ஊழியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தின் போது சிஐடியு நிர்வாகிகள் கே. நாகராஜன், இரா. பாரி, முரளி, கமலக்கண்ணன், தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் நதியா, சிபிஐஎம்எல் நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
