tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சிறப்பு  குறைதீர் கூட்டம் ராணிப்பேட்டை,

நவம்பர் 11: இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19.11.2025 (புதன்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் (GDP Hall) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்போர், தங்களுடைய படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் 

உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம்  கடலூர் அருகே கொலை வழக்கில்  10 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர், நவ.11- கடலூர் அருகே உள்ள கீழ் அருங்குணத்தைச் சேர்ந்த வரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளருமான சுபாஷ் (வயது 34), 2020 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி மாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாகச் சுபாஷுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் இடையே இருந்து வந்த பகையே இதற்குக் காரணம். கொலை சம்பவம் தொடர்பாக சுபாஷின் அண்ணன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீ சார் தாமோதரன் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனர். முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெங்கடாபதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மேலும் பக்கிரிசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சரஸ்வதி தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்டர், மணி மாறன், தர்மராஜ், தினேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ₹2,000 அபராத மும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.

காலமானார்

கும்மிடிப்பூண்டி, நவ.11- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு கட்சி கிளைச் செயலாளர் எஸ். கோவிந்த ராஜ் அவர்களின் மனைவி வைஜெயந்திமாலா (வயது 63) உடல்நலக் குறைவால் செவ்வாயன்று (நவம்பர் 11) கால மானார். மறைந்த வைஜெயந்திமாலா அவர்களின் உட லுக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வட்டச்செயலாளர் டி. கோபால கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ. ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் எம்.சி. சீனு, ப. லோகநாதன், வி.குப்பன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மேல்முதலம்பேடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.