100 நாள் வேலை முறைகேடுகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, நவ.13 - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.பா.பெரிய சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வி.மாரியப்பன் கண்டன உரையாற்றினார். 100 நாள் வேலை திட்டத்தில் குடும்பத்திற்கு 200 நாள் வேலையில் தினக்கூலி ரூ.600 வழங்கிடவும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை செய்யும் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி,பொங்கல் பண்டிகை காலங்களில் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஜாப் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 100 நாள் குறையாமல் வேலை கட்டாயம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 50 நபர்களுக்கு மட்டும் வேலை வழங்குவதை கண்டித்தும், சட்ட கூலி 336 குறையாமல் வழங்க வேண்டும். வேலைக்கு வராத நபர்களின் பெயரில் பணத்தை எடுக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையால் வீடு இடிந்தவர்களுக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் பி.சுப்பிர மணியன், மாவட்ட பொருளாளர் பி.பழனி, உரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் கே.வேல்முருகன், ஏ.கே.முருகன், மாவட்ட குழு கே.ஜெயமூர்த்தி, கே.பாஸ்கர், கே.குமார், கே.மூக்கன், என்.கோவிந்தன் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
