சமகாலத்தில் சாதியும் சவால்களும் திறந்தவெளி கருத்தரங்கம்
சிதம்பரம், நவ.14- சிதம்பரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தீஒமு மாவட்ட பொருளாளர் எம். வீராசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு சமகாலத்தில் சாதியும் சவால்களும் என்ற தலைப்பில் தமிழகத்தில் பள்ளி மற்றும் சமூகத்தில் உள்ள நுணுக்கமான சாதிய பாகுபாடுகளை எடுத்துரைத்து பேசினார். இதனைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பழ. வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பிரகாஷ், அண்ணாமலை பல்கலைக்கழக ஒப்பந்த ஊழிய சங்க தலைவர் எஸ்.ராஜா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, சிஐடியு மாவட்ட துணை தலைவர் சங்கமேஸ்வரன், சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். பாலையா, புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆர் கே சரவணன்,துணை செயலாளர் வி.மேரி,மாவட்ட குழு உறுப்பினர்கள் மருதவாணன், சிவகாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தீர்மானங்கள் சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட அமைக்கப்பட்ட ஆணையத்தை விரைந்து செயல்படுத்தி தனி சட்டம் இயற்ற வேண்டும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களை பாதாள சாக்கடை பணியில் அமர்த்த கூடாது, மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும், பட்டிய லின பழங்குடி மக்கள் மீது தொடரும் பாலி யல் வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
