நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலைஞர்கள், நாடகவியாளர்கள் , கலை இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக காந்தி வீதியில் இருந்து கலைஞர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
