சென்னை:
தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக் கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். கருப்பு பூஞ்சை பரவல் குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிக ளும் பங்கேற்றனர்.ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது;-கருப்பு பூஞ்சை தொற்று, ஸ்டீராய்டு கொடுப்பதால் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் வரை பாதிக்கப்பட்டுள் ளனர். மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை வார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓமந்தூரார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர் பாக ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரி நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்துகள் போதுமான அளவு உள்ளன. கருப்பு பூஞ்சை குறிப் பாக கண்கள், மூக்கு, மூளையை பாதிக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் வியாதி. கொரோனாவுக்குப் பின் வந்ததல்ல. மேலும் குணப்படுத்தக்கூடிய நோய். எனவே மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலிலே இதனை கண்டுபிடித் தால் குணப்படுத்த முடியும். மேலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டவர்கள் 75 விழுக்காடு பேர் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள். கருப்பு பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.