tamilnadu

img

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் கடலூரில் மல்லர்கம்ப வீரர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் கடலூரில் மல்லர்கம்ப வீரர்களுக்கு பாராட்டு

கடலூர், மார்ச் 10 - தமிழ்நாடு மல்லர்கம்ப கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மல்லர்கம்ப கழகம் இணைந்து பொன்மலைபட்டியில்  12-வது மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி நடை பெற்றது.  இதில் கடலூர் மாவட்ட மல்லர்கம்ப கழக அணி சார்பாக 40-க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் பங்குபெற்று  குழுப்போட்டி யில்  6 தங்க பதக்கம், 24 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் மற்றும் தனி நபர் பிரிவில் 2 வெள்ளி பதக்கம், 8 வெண்கல பதக்கங்களும் வென்று மாநில அளவில்  3ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தனர். கடலூர் மாவட்ட மல்லர்கம்ப அணிக்கு  பாராட்டு விழா அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட மல்லர்கம்ப கழக தலைவர்  ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு  விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திரு வண்ணாமலை பிரிவு  மண்டல முது நிலை மேலாளர் சி.சாந்தி, கடலூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அலுவலர் மகேஷ்குமார் கலந்துக் கொண்டனர்.   மல்லர் கம்ப கழக துணை தலைவர் அசோகன் , பொருளாளர்  மணிபால் பொதுச்செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் பாபு  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.   பயிற்சியாளர்கள் , கோபிநாத், புரு ஷோத்தமன் , கிரிஜா, பிரசாந்த்,  மற்றும் மேலாளர்கள் முஷாரப், ஹேமபிரியா கலந்து கொண்டனர்.