tamilnadu

மாளந்தூர் மக்களுக்கு வெங்கல் சுகாதார நிலையத்தில் அனுமதி

மாளந்தூர் மக்களுக்கு வெங்கல்  சுகாதார நிலையத்தில் அனுமதி

ஊத்துக்கோட்டை, நவ.12- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த மாளந்தூர் கிரா மத்தில் சுமார் மூவாயிரம் மக்கள் வசிக்கின்றனர்.  கிராமத்தைச் சுற்றிலும் சமூகக் காடுகள் இருப்ப தால், பாம்பு மற்றும் குரங்கு கள் போன்ற விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. மாளந்தூரில் சுகாதார நிலை யம் இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்து வசதியில்லாத 7 கி.மீ தொலைவில் உள்ள ஏனம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறி வுறுத்தி இருந்தனர். இத னால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, மாளந்தூர் மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த, போக்குவரத்து வசதி அதிகம் உள்ள வெங்கல் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், வட்டச் செயலாளர் என்.கங்கா தரன் உள்ளிட்டோர் இந்த மனுவை அளித்தனர். மனுவைப் பெற்ற அதி காரிகள், மாளந்தூர் கிராம மக்கள் இனி வெங்கல் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்ததுடன், அதற்கான உடனடி உத்த ரவையும் பிறப்பித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால், மாளந்தூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதில்,  சிபிஎம் கிளை செயலாளர்  ஜெயபால், கட்சி யின் முன்னணி ஊழியர்கள் முத்து, சி.ரவிசந்திரன், மணி வாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.