tamilnadu

img

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்; இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள்
தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த - பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.
இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.