திருப்பத்தூரில் நாட்றம்பள்ளி வட்டாரம், கொத்தூர் ஊராட்சியில் ஸ்ரீ லட்சுமி மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை நாட்றம்பள்ளி ஒன்றியத்திலுள்ள 67 பள்ளிகளிலும் பயன்படுத்திட முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி வியாழனன்று (நவ.13) துவக்கிவைத்தார். உடன் மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
