சென்னை, ஜூன் 18- சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவ கங்கள், விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. பெரிய மால்க ளில் உள்ள கடைகளும் தண்ணீர் கிடைக்காமல் ஒரு நாளைக்கு 4 மணி நேரமே திறந்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் பல தண்ணீர் இல்லாமல் பணிகளை முடக்கியுள்ளன. சென்னையில் பணிபுரி யும் பெண்களில் பலர் விடுதிகளில் தங்கியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்க ளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் 30 முதல் 60 பெண்கள் வரை தங்கியுள்ளனர். இவர்கள் குளிக்க, உடைகளை துவைப்பதற்கு நிறைய தண்ணீர் தேவை. லாரி, லாரியாக தண்ணீர் வாங்கி ஊற்றினாலும் பெண்கள் விடுதிக்கு தேவைப்படும் தண்ணீரை பெற முடிய வில்லை. இதனால் பெண்கள் விடுதிகளை நடத்துபவர்கள் அதை மூடி வருகிறார்கள். சென்னையில் இதுவரை 15 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு விட்டன. மழை பெய்து தண்ணீர் வந்த பிறகு வாருங்கள் என்று அந்த விடுதிகளில் தங்கி இருந்த பெண்களிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு விடுதி பெண்களிடம் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தண்ணீர் விலையை உயர்த்தி விட்டனர். 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி தண்ணீர் முன்பு ரூ.1200க்கு விற்கப்பட்டது. தற்போது அது ரூ.4 ஆயிரமாக உயர்ந்து விட்டது. கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் 12 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க முன் வந்தும் தண்ணீர் கிடைக்க வில்லை. இது தண்ணீர் அதிகம் புழங்கும் சேவைத் துறைகளை முடக்கி வருகி றது.