நாய், குரங்கு தொல்லை! பெரணமல்லூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, நவ.14- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் பேரூரில் தெரு நாய்கள் மற்றும் குரங்குகளின் தொல்லை அதிகரித்து பொது மக்கள் கடிபட்டு வருவதால், பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வெள்ளியன்று அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாய் மற்றும் குரங்குகளின் தொல்லை களால் மக்களும் சிறு வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிபிஎம் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் கண்துடைப்பு நடவடிக்கையாக சில நாய், குரங்குகளை மட்டும் பிடித்தது. தொல்லை தொடர்ந்து வருவதால், அனைத்தையும் பிடித்து தொலைதூரம் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் பி.கே.முருகன் தலைமை தாங்கினார். இடைக்குழு உறுப்பி னர் எ.பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரண மல்லூர் சேகரன், வட்டார செயலாளர் பிரபாகரன், இடைக்குழு உறுப்பினர் இரா.ராஜசேகரன், பேரூராட்சி கவுன்சிலர் மா.கௌதம்முத்து, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் விளைவாக பேரூ ராட்சி நிர்வாகம் 22 குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
