tamilnadu

img

கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் பொறுப்பற்று அலட்சியம் காட்டும் துறைகள்

கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால்  பொறுப்பற்று அலட்சியம் காட்டும் துறைகள்

விழுப்புரம், நவ,12- விழுப்புரத்தில் வடிகால் வாய்க்கால் சீரமைப்புப் பணி கிடப்பில் போடப்பட்டி ருப்பது, நகராட்சி நிர்வாகத்தின் தொலை நோக்கற்ற தன்மையையும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதில் உள்ள அலட்சியத்தையும் அப்பட்டமாகக் காட்டு கிறது. நகரின் நீர்ப் போக்குவரத்து வாய்க்கால்களைப் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. 9 கோடி ரூபாய் திட்டம் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் முதல் ஜானகிபுரம் மேம்பாலம் வரை, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் பட்ட வடிகால் வாய்க்கால் பணி, அதன் நோக்கத்தை முழுமையாக அடைய வில்லை. அரசு சட்டக் கல்லூரி முதல் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் வரையிலான முக்கியப் பகுதி மட்டும் முறையாகவும், முழுமையாகவும் முடிக்கப்படாமல், அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிடப்பில் போடப்பட்ட இந்தப் பகுதியில், குப்பைகள் குவிந்து, தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இதனால், நகரின் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் லேசான மழைக்கே 'பழைய ஏரி' போல் காட்சியளிக்கின்றன. பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அவலம் இந்தப் பணி ஏன் கிடப்பில் போடப் பட்டது என்று கேள்வி எழுப்பினால், நக ராட்சி நிர்வாகம் "இது நெடுஞ்சாலைத் துறை யின் பணி" என்று கூறி முழுமையாகத் தட்டிக் கழிக்கிறது. மறுபுறம், கோடிக் கணக்கான ரூபாய் செலவில் திட்டத்தைச் செயல்படுத்திய நெடுஞ்சாலைத் துறை, மக்களின் அவலக் குரலுக்குச் செவி சாய்க்காமல், 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போல மௌனம் சாதிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டு, கிடப்பில் போடப்பட்ட வாய்க்காலைச் சீரமைத்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.