டெங்கு, சிக்கன் குனியா விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைப்பு
புதுச்சேரி, நவ.13- டெங்கு, சிக்கன் குனியா குறித்து விழிப்புணர்வு வாகனத்தை இயக்குனர் செவ்வேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு செய்தி களைக் காண்பிக்கும் வகை யில் லைட்டிங் பேனர் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் ஒரு மாத காலத்திற்கு புதுச்சேரி முழுவதும் மைக் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனம் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் சிறப்பு தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும் விழிப்பு ணர்வு பட்டிமன்றம், வீதி நாடகங்கள், பன்பலை வானொலி, திரை யரங்கு கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு விளம்பரம் செய்ய வும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பிரச்சார வாகனம் துவக்கம் புதுச்சேரி சுகாதார இயக்குனரக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு வாகன துவக்க நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் எஸ்.செவ்வேள் கொடியசைத்து வாக னத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் கோவிந்தராஜ், துணை இயக்குநர்கள் மருத்துவர் ஜி. ரகுநாதன், மருத்துவர் சமீமுனிசா பேகம், மருத்து வர் ஆனந்தலக்ஷ்மி, உமா சங்கர் உதவி இயக்குநர் முருகன், மருத்துவர் விவே கானந்தா மற்றும் மாணவர் நல அதிகாரி உட்பட இதர திட்ட அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
