tamilnadu

தில்லி குண்டு வெடிப்பு ‘மாற்றியமைக்கப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது(?)’

தில்லி குண்டு வெடிப்பு ‘மாற்றியமைக்கப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது(?)’

\தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்  நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை நடந்த கார் குண்டு வெடிப் பில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. பலியானவர்களின் செவிப்பறைகள் மற்றும் நுரையீரல்கள் (lungs) கிழிந்துள்  ளன. இது குண்டு வெடிப்பு மிக நெருங் கிய தூரத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது என்று உடற்  கூறாய்வு அறிக்கையின்படி மௌலானா  ஆசாத் மருத்துவக் கல்லூரியின் தடய வியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாதிப்புகள் பெரும்பாலும் உடலின்  மேல்பகுதி, தலை, மார்பு ஆகியவற்றில்  காணப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட வர்களின் உடலிலோ அல்லது உடை களிலோ வெடிபொருட்களின் துண்டுகள்  எதுவும் காணப்படவில்லை எனவும் தடய வியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த நபர்களில் ஆறு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த  குண்டுவெடிப்பில் புதிய அல்லது மாற்றி யமைக்கப்பட்ட வெடிபொருள் பயன்  படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்  துள்ளது. அமோனியம் நைட்ரேட்டுடன் கூடுத லாக, உயர்தர வெடிபொருட்களும் பயன்  படுத்தப்பட்டுள்ளன என்று தடய அறிவி யல் ஆய்வக அதிகாரி ஒருவர் கூறியதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கி ருந்து நாடு திரும்பிய நிலையில், குண்டு வெடிப்பால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனை சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.  ஏற்கெனவே சட்டவிரோதச் செயல்  கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, என்ஐஏ 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்  துள்ளது. டிஜி விஜய் சாகரே தலைமை யிலான இந்தக் குழுவில் ஐஜி, இரண்டு  டிஐஜிக்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும்  டிஎஸ்பி நிலை அதிகாரிகள் இடம்பெற் றுள்ளனர்.