மரக்காணத்தில் நீர்வடிகால் வாய்க்கால் சீரமைக்க கோரி சிபிஎம் போராட்டம் வெற்றி!
விழுப்புரம், நவ.14- விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் நீர்வடிகால் வாய்க்கால் சீரமைப்பு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட காத்திருக்கும் போராட்டம் வெற்றி பெற்றது. நடுக்குப்பம், திருக்கனூர் வழியாக வரும் நீர்வடிகால் ஓடையை சரிசெய்து பக்கிங் கால்வாயுடன் இணைக்கும் வரை உள்ள முட்புதர்களை அகற்றவும், தற்போது பெய்த கனமழையால் நீர்வடி கால் வாய்க்கால் இல்லாததால் விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கால்வாய் தூர்வாரும் பணியை துவங்கவும், கந்தாடு கிராம பஞ்சாயத்து ஏரி பெஞ்சல் புயலில் உடைந்த கரையை சரிசெய்து மதகு சீர மைக்கவும் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. வட்ட செயலாளர் ஆர்.உலகநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்டக்குழு வி.அர்ச்சுனன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.மனோகர், ஜெ.ராஜி, எம்.குமார், எஸ்.ராஜி, கே.ஐயப்பன், எம்.அமுதா, கிளை செயலாளர்கள் நடுக்குப்பம் எஸ்.ஜானகி ராமன், டி.சேகர், திருக்கனூர் ஆர்.துளசிங்கம், கந்தாடு கே.சேகர், மரக்காணம் ஏ.சேகர், நகர் டி.கிருஷ்ணன், நடுக்குப்பம் டி.செல்வி, மாதர் சங்க நிர்வாகி எஸ்.விஜியலட்சுமி, ஏ.ராதா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். உடனடியாக விரைந்து வந்த மரக்காணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் போராட்டக்காரர்களுடன் சமா தான பேச்சுவார்த்தை நடத்தி, 30ம் தேதிக்குள் நீர்வடிகால் வாய்க்காலை சீரமைத்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
