tamilnadu

img

கருத்தரிப்பு மையங்களில் சென்னை ‘ஆகாஷ்’ மருத்துவமனைக்கு முதலிடம்....

சென்னை:
சென்னையிலுள்ள பல்வேறு கருத்தரிப்பு மையங்களை ஆய்வு செய்த நிபுணர் குழு ஒன்று ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தை சென்னை நகரின் முதலாவது ஆய்வு மையமாக தேர்வு செய்துள்ளது.

சென்னை நகரில் உள்ள பல்வேறு கருத்தரிப்பு மருத்துவமனைகளை ஆய்வு செய்து இந்த தனியார் குழு மூன்று முதல் கருத்தரிப்பு மையங்களை வரிசைப்படுத்தி உள்ளது. அதில் முதலாவதாக ஆகாஷ் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை விளங்குகிறது.50 வகையான ஆய்வுகளை உள்ளடக்கிய இந்த தேர்வில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற் கொண்ட நோயாளிகளின் கருத்துகள், நோயாளிகளின் வரலாறு, புகார்கள், திருப்திகரமான சேவை, மருத்துவமனை மீதான நம்பிக்கை,  மருத்துவச் செலவு மற்றும் பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது .

இந்த ஆய்வில் ஆகாஷ் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை சென்னை நகரின் முதலாவது சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. குழந்தைப் பேறு மருத்துவத்தில் உலகத் தரம் வாய்ந்த நிலையில் இந்த மையம் செயல்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவமனையை மருத்துவர் காமராஜ் மற்றும் மருத்துவர ஜெயராணி காமராஜ் ஆகிய இருவரும் நிர்வகித்து வருவதாகும் இந்த அறிக்கை கூறுகிறது.மருத்துவர் ஜெயராணி காமராஜ் மகப்பேறு இயல் மற்றும் பெண்களுக்கான பிணியியல் மருத்துவராவார். இந்த மையத்தில் துவக்க கட்ட ஆலோசனை முதல் மிக உயரிய குழந்தையின்மைக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் அனைத்துவித மருத்துவ வசதிகள் கொண்ட அறை, உலகத்தரம் வாய்ந்த ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளன.

தனி சிறப்பு அம்சங்கள்:-
செயற்கை விந்தூட்டல், வெளி சோதனை முறை கருக்கட்டல்,  சினை நீர் கோளம் மாற்றம், வாடகைத் தாய், உறைந்த கருப்பரி மாற்றம் , நீர் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை, இயற்கை முறையிலான கருகூட்டல், வயிறு உட்காண் அறுவை சிகிச்சை,  விரைப்புத்தன்மை கோளாறு , அதிர்ச்சி அலை சிகிச்சை இன்னபிற அம்சங்களாகும்.