மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்று காங்க்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினர்.
கேரளம் மாநிலம் கோட்ட யத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, "ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஎம் உடன் சித்தாந்த ரீதியாகப் போராடுகிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் படிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது.
அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.