அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்!
அமைச்சர் எ.வ.வேலு உறுதி
கோவை, ஜூலை 19- கோவை - அவிநாசி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பா லப் பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக் குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறி வியல் மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு சனியன்று ஆய்வு செய் தார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், பெரியார் நூலகக் கட்டுமானப் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. பெரியார் நூலகத் தில் கண் திருஷ்டி பலகை வைக்கப்பட்டி ருப்பது குறித்த சர்ச்சைக்கு, “ஒப்பந்தக் காரர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப் படையில் இந்தப் பலகையை வைத்துள் ளனர். நான் ஒரு பெரியாரிஸ்ட். பகுத்தறி வாளனாக இருக்கும் நான் இதுபோன்ற செயல்களை ஏற்கமாட்டேன். கட்ட டப் பணிகள் முடிந்து அரசிடம் ஒப்படைக் கப்படும்போது இதுபோன்ற பலகை கள் எதுவும் இருக்காது, என்றார். மேலும், அவிநாசி சாலையில் மேற் கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணி கள் குறித்து பேசிய அமைச்சர், ரயில்வே கிராசிங் பகுதியில் அனுமதி தாமதமா னாலும், தற்போது அனுமதி கிடைத்து பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. மேம்பாலத்திற்கு 8 ஏறு, இறங்கு தளங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு இடத்தில் மட்டும் நீதிமன்ற வழக்கு கார ணமாக அனுமதி தாமதமாகியுள்ளது. அதையும் கண்காணித்து வருகிறோம். இந்த மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும். சுரங் கப்பாதை அமைப்பது குறித்து தேவை ஏற்படும் பட்சத்தில் அதற்கான பணி களும் மேற்கொள்ளப்படும், என்றார். இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.