தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
தருமபுரி, ஜூலை 19- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தரும புரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட மாநாடு, சனியன்று வட்டச் செயலாளர் சின்னு தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி யில் நடைபெற்றது. வாலிபர் சங்க வட்டத் தலைவர் குப்பன் வரவேற்றார். சிபிஎம் வட்டச் செயலாளர் தனுஷன் துவக்கவு ரையாற்றினார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி. வஞ்சி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். தீர்த்தகிரி, விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலா ளர் எம்.கணேசன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாவட் டத் தலைவர் சி.சொக்கலிங்கம், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் ராகப்பிரியா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து, அமைப்பின் வட்டத் தலைவராக சின்னு, செயலாளராக முனியப்பன், பொருளாளராக ராமன், துணைச்செயலாளர்களாக குப்பன், கிருஷ்ணவேணி, துணைத்தலைவர்களாக சின்னசாமி, கலைமணி உட்பட 19 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் நிறைவுரையாற்றினார்.