கிராமப்புறப் பள்ளிகளுக்கான வசதியான கல்வி கற்றல் திட்டம்
செங்கல்பட்டு, நவ.12- கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சிறுதாமூர் ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை, ‘வசதியாக கல்வி கற்றல் ‘ என்ற திட்டத்தை 2025 ஜூலையில் தொடங்கியது. போதுமான இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் முதுகுவலி, முது கெலும்பு கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்ச னைகளைத் தவிர்க்கவும், அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும் வசதி யான இருக்கை மற்றும் மேசைகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று இத்திட்ட த்தின் நிர்வாக இயக்குநர் கவிஞர் விஜயகிருஷ்ணன் கூறினார். இத்திட்டத்தின் கீழ், அறக்கட்டளையானது பெருநகரங்களில் உள்ள தனியார் கல்வி நிறு வனங்களில் இருந்து பயன்படுத்தக்கூடிய இருக்கை மற்றும் மேசை களை நன்கொடையாகப் பெறுகிறது. அவற்றைச் சீரமைத்து, புதுப்பித்து, வண்ணம் தீட்டி, செங்கல் பட்டு மாவட்டத்தின் அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கு கிறது. தளவாடப் போக்கு வரத்து மற்றும் புதுப்பித்தல் செலவுகளை அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. அரசின் நிதி உதவி யின்றி நடைபெறும் இத்திட்டத்திற்கு, சென்னை ரோட்டரி மிட்டவுன் மற்றும் எஸ்பிஓஏ கல்வி அறக் கட்டளை போன்ற நிறு வனங்கள் ஆதரவு அளிக் கின்றன. உதாரணமாக, எஸ்பிஓஏ பள்ளி வழங்கிய 330 இருக்கை-மேசைத் தொகுப்புகள் புதுப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
