tamilnadu

img

மலேசியா அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி அபார வெற்றி

இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான தொடரின் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்களில் 3 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மலேசியாவில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி சுற்றுப்பயணம் செய்து மலேசியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இந்நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இதன் மூலம் 5 ஆட்டங்களில் 3 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி (5-வது) போட்டி இன்று மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.


;