உளுந்தூர்பேட்டை, ஆக. 25- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உளுந்தூர்பேட்டை பணி மனையில் வருகைப் பதிவில் முறைகேடு செய்ததாக கட்டுக் காப்பாளரும், இரண்டு நடத்துநர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். உளுந்தூர்பேட்டை பணி மனையில் 51 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணி புரிகின்ற னர். இந்நிலையில் பணிமனையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் நடத்துனராக பணிபுரியும் முருகன் என்பவர் பணிப் பதிவேட்டில் கையொப்ப மிட்டுள்ளார். ஆனால் பேருந்து பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அவர் பணிக்குச் செல்லாமல் குமார் என்ற மற்றொரு நடத்துனரை பணி செய்யச் சொல்லி அனுப்பியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தலைமைய கத்தில் இருந்து வேறு சிலரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். ஆய்வில் ஆள்மாறாட்டம் செய்து பணிக்கு சென்றது தெரிய வந்தது. இதற்கு அதிகாரிகளின் அனுமதி பெறவில்லை. எனவே கட்டுக் காப்பாளர் பணியை பார்க்கும் பாலசுப்பிர மணியம், நடத்துனர்கள் முருகன், குமார் ஆகி யோரை தற்காலிக பணி நீக்கம் செய்து பொது மேலாளர் உத்தரவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறு சில முறைகேடு களில் ஈடுபட்டதாக அலுவல கப் பணியாளர் கண்ணகி என்பவரும் பணிமனையின் கிளை மேலாளர் சிவராமனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட கண்ணகி திடீரென்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். உடனடியாக காவல்துறை யினர் அவரை கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை பணி மனையில் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கான உணவு விடுதியில், ஒப்பந்த தாரர்கள் டோக்கன் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி அதிக பணத்தை பெற்று வந்துள்ளனர். அதேபோல் ஆளுங்கட்சி அண்ணா தொழிற்சங்க த்தின் மத்திய சங்க நிர்வாகி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பணிப் பதி வேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு அதற்கு மாற்றுப் பணி என்ற பெயரில் வேலையே செய்யாமல் பல்லாண்டு களாக சம்பளம் பெற்று வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது. மேலும் புதிய தொழிலாளர்களை மிரட்டி தொடர் பணி வாங்குவதும், அவர்களுக்கு பிரச்சனை எனும்போது அதற்காக ஏராளமான தொகை கையூட்டு பெறுவ தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கடந்த 19ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்திக் கட்டுரை வெளியான நிலையில், அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது குறிப்பிடத்த க்கது.