tamilnadu

img

பட்டீஸ்வரம் கோவிலுக்குள் பாதாள அறை கண்டுபிடிப்பு

பட்டீஸ்வரம் கோவிலுக்குள் பாதாள அறை கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரத்தில் ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவி நினைவாக கட்டி எழுப்பிய பள்ளிப்படை கோவிலான மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலில், பாதாள அறை  கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரலாற்று ஆய்வாளர்கள் அது தொடர்பாக தங்களுடைய ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர்.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ராஜராஜ சோழனின் மனைவியான பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோவிலாகும்.  இக்கோவிலை, தன்னுடைய சிற்றன்னை பஞ்சவன்மாதேவி நினைவாக ராஜேந்திரசோழன் கி.பி  1021 ஆம் நூற்றாண்டில் கட்டி எழுப்பி யுள்ளதாக கோவிலில் உள்ள கல்வெட்டு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ராஜேந்திர சோழன் மீது, அதீத அன்பு கொண்டிருந்த பஞ்சவன்மா தேவி தனக்கு குழந்தை பிறந்தால் ஆட்சி பீடத்திற்கு போட்டி போடு வார்கள் என எண்ணி மூலிகை மருந்தை குடித்து தன்னை மலடாக்கிக்  கொண்டார். தனது சிற்றன்னையின் இந்த தியாகத்தை போற்றும் வகையில் தான், ராஜேந்திர சோழன் அவரது மறைவுக்குப் பிறகு, அவருக்காக பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம் என்ற இந்த பள்ளிப்படை கோவிலை எழுப்பி இருப்பதாக கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை மீண்டும் புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.  இதையடுத்து ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்து, அடுத்த மாதம் ஒன்ப தாம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது? இந்நிலையில் கோவிலின் வடக்கு பிரகாரத்தில் புதிய தளம்  அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது, வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து தோண்டிப் பார்த்தபோது, கருங்கல்லால் கட்டப்பட்ட பாதாள அறை இருப்பது தெரியவந்தது. சுமார் எட்டு அடி ஆழத்திலும் மேற்குப் புறமாக 16 அடி அகலத்திலும் இந்த பாதாள அறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகவல் அறிந்து, இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கோவிலுக்கு வந்து பாதாள அறையை பார்வை யிட்டனர்.  அப்போது, அந்த அறையின் மேற்குப்புறப் பகுதியில் பெரிய கருங்கல் கொண்டு தனியாக மூடப் பட்டிருப்பதாகவும், அதற்குப் பின்பாகத் தான் அந்த பாதாள அறைக்கு வரக் கூடிய பாதை இருக்கலாம் எனவும் கணித்துள்ளனர்.  இந்த பாதாளறை 14 ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்டவையாக இருக்கலாம் எனவும், படையெடுப்பு களின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக இதனை வடி வமைத்திருக்கலாம் எனவும் வரலாற்று  ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. எனவே, குடமுழுக்கிற்கு முன்பாக தொல்லியல் துறையினர் அந்த பாதாள  அறையை ஆய்வு செய்து, அதில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதே னும் உள்ளதா என்பதை கண்டறிந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வரலாற்று ஆய்வா ளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்ச் 27-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

தமிழக முதல்வரின், “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒரு நாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 27.03.2025 (வியாழக்கிழமை) அன்று, திருவோணம் வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு 27.03.2025 அன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  27.03.2025 அன்று மாலை 4 மணியளவில், திருவோணம் வட்டம் ஊரணிபுரம் மெயின்ரோடு, பஸ் ஸ்டாப் எதிர்ப்புறம் உள்ள ஸ்ரீ லெஷ்மி மஹாலில் மாவட்ட ஆட்சியரால், குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.  அப்போது, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.