சென்னை,செப்.16- இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல் பாடுகள் அங்கக கழிவுகள் ஆகிய வற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையை உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் “அங்கக வேளாண்மை” என்று பெய ரிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான அங்கக வேளாண்மை கொள்கையை உரு வாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தலை மையில் தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை உத்திகளை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பாது காப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு, விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு, மண் வளப் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை மற்றும் இதன் மூலம் அதி கரித்து வரும் அங்கக வேளாண்மை உற்பத்தி பொருட்களின் புதிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேளாண் மக்களின் தற்சார்பை நிலை நிறுத்த தேவையான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குவதற்கான அவசியம் குறித்தும், தமிழ்நாட்டில் படிப்படியாக அங்கக வேளாண் மையை விரிவுபடுத்துவது குறித்தும், அதற்காக, அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
நாட்டின் பிற மாநிலங்களில் குறிப்பாக, சிக்கிம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்தும் அவற்றின் நடைமுறை சாத்தியக் கூறு கள், நடைமுறைப்படுத்துவதிலுள்ள இடர்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை, புவியியல் அமைப்புக்கு உகந்த வகை யில் அங்கக வேளாண்மைக் கொள்கை அமையவேண்டும். விவ சாயிகள் தாமாக முன்வந்து அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பாரம்பரிய வேளாண் உத்திகளை ஆராய்ந்து, அவற்றின் மேன்மைத் தன்மையினை உறுதி செய்து, அதனை ஆவணப்படுத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பரவலாக்குவதன் முக்கியத்துவத்தை தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், சிறப்புச் செயலாளர், துறைத் தலைவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள், அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.