tamilnadu

பேரா.சோ. மோகனாவிற்கு வீரமங்கை விருது

 பேரா.சோ. மோகனாவிற்கு வீரமங்கை விருது

திண்டுக்கல்லில் பேராசிரியை முனைவர். சோ.மோகனாவிற்கு வீரமங்கை விருது வழங்கப்பட்டது. பெண்கள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தாய்க்கூடு அமைப்பின் சார்பாக 10 ஆம் ஆண்டு வீர மங்கை விருது வழங்கும் நிகழ்ச்சி ஸ்வாகத் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்க்கூடு நிறுவனர் குணவதி தலைமை வகித்தார். மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார், தரணி குழுமத்தின் நிறுவனர் ரத்தினம், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், டாக்டர் அமலாதேவி ஆகியோர் பேசினர். பேராசிரியை முனைவர் சோ. மோகனா, திண்டுக்கல் இலக்கிய களத்தின் நிர்வாகி கவிஞர் சுசீலாமேரி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு வீரமங்கை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.