மக்கள் மீது நம்பிக்கை இழந்து எதிர்க்கட்சிகள் கடவுளிடம் செல்கின்றன!
கி.வீரமணி விமர்சனம்
கி.வீரமணி விமர்சனம் சென்னை, ஜூன் 23- சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவி டர் கழகம் சார்பில் “96 ஆவது ஆண்டு பெரியார் பதிப்ப கங்கள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண் காட்சி நடைபெற்றது. இதில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “மக்களுக் கான ஆட்சியை நடத்தி வரும் திமுக ஆட்சியை அழிக்க முடி யாது என்பதை அதிமுக, பாஜக உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் உணர்ந்துவிட்டன. அதனால் தான் முருகனிடம் சென்றுள்ள னர். தமிழ்நாட்டு மக்களின் முழு ஆதரவும் திமுக கூட்டணிக்கு உள்ளது. இத னால் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல் கடவுளிடம் சென்றுள்ளனர்” என்று விமர்சித்தார். கடந்த தேர்தலில் முருகன் கை கொடுக் காததால் இப்போதும் கை கொடுக்க மாட்டார் என்றும், மதுரையில் நடைபெற்ற மாநாட்டால் எந்த பலனும் கிடைக்காது என்றும் கூறினார். திமுக கூட்டணியில் விரிசல் என்று ஊடகங்கள் கூறுவதை மறுத்து, இந்த கூட்டணியை யாரா லும் பிரிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்தார்.