பத்து விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் பவர்டில்லர்: குடந்தை எம்எல்ஏ வழங்கினார்
வேளாண்துறை சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தில்
கும்பகோணம், ஜுன் 26- வேளாண்மை பொறியியல் துறை சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டம் 2025 - 26 ஆம் ஆண்டு, விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டு, அரசு மானியத்துடன் கூடிய 10 பவர் டில்லர்களை பத்து விவசாயிகளுக்கு வழங்கினார். இதன் மொத்த மதிப்பு ரூ 22,68,400. ஒரு பவர் டில்லருக்கு அரசு மானியம் 1,13420. மொத்தம் மானிய தொகை 11,34200, இந்நிகழ்வில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ, சுதாகர், வாளபுரம் நடராஜ், தேவனாஞ்சேரி பகுதிச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.