மேட்டுப்பாளையம், செப். 14-
யானைகளின் வலசை பாதையில் அமைந்து ள்ளதாக சென்னை உயர்மன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கல்லார் பழப்பண்ணையை மூடிவிட எடுக்கப்படும் நடவடிக்கை இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையின் பொக்கிஷம்
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள கல்லார் என்னு மிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப் பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும், மண்வளமும் மிகுந்த இப்பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்பழப்பண்ணை துவக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்த மான இப்பழப்பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே காலநிலை நிலவுவ தால் உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவக் குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கப்பூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் உள்ளன. மேலும், 300க்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கப்படும் இலவம் பஞ்சு மரங்கள், காணவும் கிடைக்கவும் அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டிக் கிடக்கின்றன.
152 பட்டாம்பூச்சி இனங்கள்
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர் லால் நேரு முதல் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைசிறந்த தாவர வியல் ஆர்வலர்கள் வரை இங்கு வந்து சென்றுள்ளனர். இவை மட்டுமின்றி பசுமை மாறா இப்பகுதியில் முகாமிட ஆண்டுதோறும் பல்வகை பட்டாம்பூச்சிகள் பல்லாயிரக்கணக்கில் குவிவது வழக்கம். இதனால் வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் இங்கு வந்தே தங்களது பதிவுகளை துவக்கு கின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 291 வகை பட்டாம்பூச்சி இனங்களில் கல்லார் பழப்பண்ணை பகுதியில் மட்டுமே 152 வகை பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும், யானைகள் போலவே பட்டாம்பூச்சி களும் ஆண்டுதோறும் வலசை செல்லும் வழக்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தைச் சுற்றி மின்வேலி
இயற்கை எழில் மிகுந்த இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங்கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக்கள் விற்பனை, பழச்சாறு மற்றும் ஜாம் விற்பனை, குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா என பல்வேறு வசதிகள் உள்ளதால் விடு முறை நாட்களில் சுற்றுலா பயணி களின் வருகையும் அதிகரித்தே காணப்படும். மேலும், பண்ணை பரா மரிப்பு பணிக்காக உள்ளூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களும் பணியாற்றி வருகின்ற னர். வனம் சார்ந்த பகுதி என்பதாலும் இங்கு விளையும் பழங்களை உண்ண குரங்கு, மான், மயில் உள்ளிட்ட ஏராள மான பறவையினங்கள் வந்தாலும் அவ்வப்போது யானைகளின் வருகையும் இருக்கும் என்பதால் தோட்டத்தைச் சுற்றி சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பழப்பண்ணையை மூடஉத்தரவு
இந்நிலையில், யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடு கள் குறித்து கண்டிப்பான நட வடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இதுகுறித்த ஆய்விற்காக கடந்த 10.4.22 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய குழுவினர் கல்லார் வருகை தந்தனர். யானை களின் முக்கிய வலசை பாதையாக உள்ள கல்லார் - ஜக்கனாரி பீட் பகுதியில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் உடன் நேரில் ஆய்வு நடத்திய நீதிபதிகள் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்த னர். இதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 122 ஆண்டுகள் பழமையும்பெருமையும் கொண்ட கல்லார் பழப்பண்ணை மூடப்படுகிறது.
வேதனையில் உள்ளூர் மக்கள்
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “கல்லார் பழப்பண்ணை மூடப்படும் என்றும், இதற்கு மாற்றாக சிறுமுகை பகுதி யில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு பழப்பண்ணை அமைக்கப்படும்” என்று தெரிவித்தனர். ஆனால், பசுமை மாறா கல்லார் பழப்பண்ணை யில் உள்ளதுபோல், வானுயர்ந்த மரங்களையும், அங்கு விளையும் அரிய வகை கனிகளையும் மூலிகை களையும் வேறு எங்கும் விளைவிக்க வே இயலாது என்பதே அறிவியல் உண்மை. இத்தகவல் உள்ளூரை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களை யும், தாவரவியல் ஆர்வலர்களை யும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளை யம் பகுதியின் ஒரு அடையாளமாக 122 ஆண்டுகள் பழமையான வர லாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பண்ணை முடக்கப்படுவது கவலை தரக்கூடிய தாகவே பார்க்கப்படுகிறது. யானைகளின் வழித்தடத்தில் இருந்தாலும் 120 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் தங்களது வல சைக்காக பயன்படுத்தாத இந்த 20 ஏக்கர் பண்ணை நிலத்தின் வழியே மீண்டும் அவை பயணிக்கும் பயன் படுத்தும் என்பது கேள்விக்குறியே ஆகும். மேலும், கடந்த 20 ஆண்டுகளில் கல்லார் வனப்பகுதியில் ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள தனியார் பள்ளிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் தனியார் கட்டிடங்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். இயந்திரவியல் அதிசயமாக கருதப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் பாரம் பரிய சின்னமாக கருதப்பட்டு பராம ரிக்கப்படும்போது, பல்வேறு தனி சிறப்புகளை தன்னகத்தே கொண் டுள்ள பழமையான கல்லார் பழப் பண்ணையும் காக்கப்பட வேண்டிய இயற்கைவியல் அதிசயமே.