சிபிஎம் அகில இந்திய மாநாடு வரவேற்புக்குழு பணி நிறைவு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் பிரம்மாண்டமான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இம்மாநாட்டை பேரெழுச்சியுடன் நடத்திய வரவேற்புக்குழுவின் பணி நிறைவு கூட்டம் ஏப்ரல் 27 ஞாயிறன்று மதுரையில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., கே.சாமுவேல் ராஜ், எஸ்.கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.