tamilnadu

img

முதல்வரின் சகோதரர் மு.க.முத்து மறைவு; சிபிஐ(எம்) இரங்கல்!

சென்னை, ஜூலை 19- முதல்வர் மு.க. ஸ்டாலின் மூத்த சகோ தரரும், பன்முக திரைக்  கலைஞருமான மு.க.  முத்து (77) மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் முன்னாள் முதல மைச்சர்- மறைந்த கலைஞர் மு. கரு ணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்  களின் மூத்த சகோதரருமான மு.க.  முத்து அவர்கள் உடல்நலக் குறைவால்  மறைவுற்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்  குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. மு.க. முத்து அவர்கள் கலைத்துறை யிலும், அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர். தனது இனிமையான குர லில் சிறந்த சமூக நல்லிணக்க பாடல் களையும் பாடியவர். சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தொடர் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை  பலனின்றி மறைவுற்றுள்ளார். அவரது மறைவால் துயருற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உற வினர்கள், நண்பர்கள், திரையுலகினர்  அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தனது ஆறுதலையும், அனுதா பத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு பெ.சண்முகம் குறிப்பிட் டுள்ளார்.