tamilnadu

img

கள்ளக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர்: சிபிஎம் வெற்றி

கள்ளக்குறிச்சி, அக் 13- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சங்கரா புரம் ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு வார்டு எண் 11இல் போட்டியிட்ட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ச.சசிகுமார் வெற்றி பெற்றார். ஏ.பாண்டலம், மூக்கனூர் ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த ஒன்றிய வார்டில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரான ச.சசிகுமார் தனக்கு அடுத்தபடியாக வந்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் குழந்தைவேலுவை விட 250க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டினார். இங்கு அதிமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அலமேலு திருநாவலூர் ஒன்றியத்தில் ஆத்தூர், நன்னாரம் ஊராட்சிகளை உள்ளடக்கிய வார்டு எண் 5இல் மாவட்டக்குழு உறுப்பினர் இ.அலமேலுவும் வெற்றி பெற்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் தோழர் அலமேலு பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவின் சட்டமன்ற உறுப்பின ர்களான தா உதயசூரியன் ஏ.ஜெ.மணிகண்ணன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். உடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினர்.

;