ஈரோடு, டிச.29 - மாதர் சங்கம் சார்பில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை ஒழிப்பு மேற்கு மண்டல மாநாடு ஈரோட்டில் ஞாயிறன்று நடை பெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை ஒழிப்பு மேற்கு மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோடு அருகிலிருந்து பேரணி யுடன் தொடங்கியது. சமூகத்தில் சரி பாதிக்கு சமநீதி கிடைத்திட வேண்டும் என்ற முழக்கத்துடன் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக மாநாட்டு திடலை அடைந்தது. பேரணியின் முகப்பில் என்.எஸ்.கே.கலைவாணர் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அணிவகுத்தது. இந்நிகழ்விற்கு, மாதர் சங்க ஈரோடு மாவட்டச் செய லாளர் பா.லலிதா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.எஸ்.பிரசன்னா வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான கே.பாலபாரதி, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். பவித்ராதேவி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் திருப்பூர், கோவை, சேலம், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ண கிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள், திரளான பெண்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் எஸ்.கீதா நன்றி கூறி னார். முன்னதாக, மாதர் சங்க திருப்பூர் மாவட்டக் குழுவினரின் கும்மியாட்டம் இடம் பெற்றது.