tamilnadu

img

10 நிமிடம் வாகனங்களை நிறுத்துங்கள்

சென்னை, டிச. 7- மக்களை வதைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10ஆம் தேதி 10 நிமிடம் வாகனங்களை நிறுத்து  வோம் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நம்மிடம் பெட்ரோலியத்தை வாங்கி விற்கும் நேபாளத்தில் கூட பெட்ரோல் விலை  நம்மைவிட குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் நூறு ரூபாயை தாண்டி  விட்டது. தற்போதைய நிலப்படி பெட்ரோல் விலை 1 லிட்டர் 65 ரூபாய்க்கும், டீசல் விலை 1 லிட்டர் 55 ரூபாய்க்கும், சமையல் எரிவாயு  விலை 500-ரூபாய்க்கும் கீழ் குறைக்க வேண்டும். ஆகவே, டிசம்பர் 10 ஆம் தேதி பகல்  12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் இடங்களில் நிறுத்தி எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என வாகன  உரிமையாளர்களையும், வாகன ஓட்டுநர்க ளையும் கேட்டுக் கொள்கிறோம். தேசத்தை  காக்கும் இந்த போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு தரவேண்டும். இந்த போராட்டத்திற்கு சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து அறைகூவல் விடுக்கிறது.

பஞ்சாலை பிரச்சனை

தமிழகத்தில் பல பஞ்சாலைகளில் கொத்தடிமை முறையில் பெண்கள் பணி செய்து வருகின்றனர்.  மாநில அரசு தானாக  முன்வந்து எல்லா பஞ்சாலை மற்றும் வர்த்த நிறுவனங்களில் உரிய முறையில் ஆய்வு  செய்து கொத்தடிமை தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ 26 ஆயிரம் வழங்க வேண் டும். ஒப்பந்த முறை பணிகளை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், போக்குவரத்துத்துறையில் வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாசத்தொகை மாநில அரசு போக்குவரத்துறைக்கு வழங்க  வேண்டும் என சிஐடியு, தொமுச தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சந்திப்பின் போது சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், துணைப்  பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வம், துணைத் தலைவர்  ஏ.கிரு ஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்