மக்கள் நலத் திட்டங்களாலேயே, மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்றும், தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், 52 சதவிகித வாக்குகள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கும் என்று ‘இந்தியா டுடே’ ஏடு கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டா லின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “நாளுக்கு நாள் திமுக அரசுக்குத் தமிழ்நாட்டு மக்க ளின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக் கிறது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது” என்று கூறியுள்ளார். “இந்தியாவின் முதன்மை முதல்வர் என்பதைவிட இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எல்லாத் துறைகளிலும் எட்டுவதே நமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு ஏழாவது முறையும் திமுக-வின் ஆட்சி தொடரவேண்டும். தொண்டர்களின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏழா வது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக் கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.