மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மொக்கைப் பாண்டியன்(30). ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி லீலாவதி குடிநீர் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது இவரது மகன் இளமாறன்(3) கீழே கிடந்த மின்வயரை மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தற்காலிக குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.