tamilnadu

img

அரசியல் விமர்சகர் யோகேந்திரா மீது தாக்குதல்

மும்பை பிரபல அரசியல் விமர்சகரும், ஸ்வராஜ் கட்சி தலைவருமான யோகேந்திரா மகாராஷ்டிர மாநிலம் அங்கோலாவில் அரசியல் கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்றார். தனது உரையின் பொழுது,”இட ஒதுக்கீடு, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை காக்க மகா விகாஸ் அகாதி (“இந்தியா”) கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்ற தொனியில் யோகேந்திரா பேசியதாக கூறப்படுகிறது.  போலீஸ் வாகனம் மீதும் தாக்குதல் யோகேந்திரா பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே பிரகாஷ் அம் பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) அமைப்பினர், “நீங்கள் எப்படி  காங்கிரஸ் கூட்டணிக்கு (எம்விஏ) ஆதரவாக பேசலாம். இடஒதுக்கீடு பற்றி பேச நீங்கள் யார்?” எனக் கூறி யோகேந்திரா மீது 40 முதல் 50 விபிஏ அமைப்பினர் தாக்குதல் நடத்தி, மேடையில் இருந்த மைக் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் யோகேந்திராவை மீட்டு கருத்தரங்கு அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். ஆனால் யோகேந் திராவை மீட்க வந்த போலீஸ் வாக னத்தையும் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் தாக்கினர். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு போலீசார் யோகேந்திராவை மீட்டு மும்பைக்கு அழைத்து வந்தனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு வருத்தமான சம்பவம் அதன்பிறகு யோகேந்திரா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “போலீ சார் இருந்தும் சுமார் 50 பேர் என்னை தாக்கினர். அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள வர்களுக்கு இது ஒரு வருத்தமான சம்பவம் ஆகும். மகாராஷ்டிரா முழு வதும் நான் 25 ஆண்டுகளாக பேசி வருகிறேன். ஆனால் இதுபோன்ற  ஒரு சம்பவத்தை நான் சந்தித்த தில்லை. இது ஜனநாயகத்திற்கு வருத்தமளிக்கிறது, ஆனால் இது நமது உறுதியை பலப்படுத்துகிறது” என அவர் கூறியுள்ளார். யோகேந் திரா மீதான தாக்குதலுக்கு எம்விஏ கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளன.