திருப்பூர், ஜூலை 21- இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற் காக அழைத்து வரப்பட்ட சிறுவர்கள், காவல் துறையினர் கைது செய்ய துவங்கியுடன் நாலாபக்கமும் சிதறி ஓட்டம் பிடித்த சம்பவம் திருப்பூரில் அரங் கேறியுள்ளது. இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஞாயி றன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தடையை மீறி இந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு படுவதாக தெரிவித்திருந்தனர். ஆர்ப்பாட் டத்தில் கூட்டத்தைக் காட்டுவதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். சரக்கு வாக னங்களில் பொதுமக்களை அழைத்து வரக்கூடாது என்ற விதிமுறை அமலில் இருக்கக்கூடிய நிலையில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் சரக்கு வாக னங்களில் அழைத்து வந்தனர். சிறு வர்கள் வாகனத்தின் மேற்பகுதியில் பெரிய குச்சிகளை பிடித்தவாறு ஆபத்தான முறையில் அழைத்து வரப் பட்டனர். சில சரக்கு வாகனங்களில் வட மாநில வாலிபர்களும் போராட்டத் திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மேலும், சிலர் இருசக்கர வாகனங்க ளில் சாலை விதிகளை மீறியவாறு தலைக் கவசம் அணியாமலும், மூன்று பேர் வரை அமர்ந்து அதிக ஒலி எழுப்பிய படி ஊர்வலமாக வந்தனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டிருந்தார். கூச்சல் எழுப்பிய நிலையில் காவல்துறை சார்பில் கைது செய்யப்படுவதாக தெரி விக்கப்பட்டிருந்தது. கைது செய்ய துவங்கியவுடன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் மங்க ளம் சாலை, புது மார்க்கெட் வீதி, மாநக ராட்சி சாலை, பூங்கா சாலை என நான்கு புறங்களிலும் சிதறி ஓடினர். இதனைக்கண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் துறையினர் பயன் படுத்தக்கூடிய டிவைடர்களை சாலை யில் அமைத்து தடுப்பு அமைத்தனர். காவல் துறையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து குச்சிகளை வைத்து தப்பிச் சென்ற சிறுவர்களை மிரட்டி மீண்டும் அழைத்து வந்தனர். இந்து முன்னணி நபர்கள் சிறு வர்களை அழைத்து வந்தது மட்டு மல்லாமல் அவர்களை மிரட்டி கட்டாயப் படுத்தி கலந்து கொள்ளச் செய்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப் பினர் கைது செய்யப்பட்டனர்.