தொழிலாளர்களின் நலத் திட்டங் களைக் குறைத்துவிட்டு, முத லாளிகளுக்கு வரிச் சலுகை களும் மானியங்களும் வழங்கி னால் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்கிறது ஆளும் வர்க்கம். ஆனால் இந்தக் கொள்கை பொருளாதார அறி வியலுக்கு முற்றிலும் முரணானது என்று பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் எழுதியுள் ளார் பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக். தற்போதைய நவதாராளமயக் கொள்கையின்படி, நிதிப் பற்றாக்குறை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போகக்கூடாது. அப்படி இருக்கும்போது, முதலாளிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டுமென்றால் அதற்கான நிதி எங்கி ருந்து வரும்? தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களைக் குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகிறது. இதன் விளைவு என்ன? தொழிலாளர் களின் கையில் பணம் குறையும்போது அவர்களின் வாங்கும் சக்தியும் குறை கிறது. சந்தையில் பொருட்களுக்கான தேவை குறைகிறது. தேவை குறையும் போது உற்பத்தியும் குறைகிறது. வேலை வாய்ப்புகளும் குறைகின்றன. “ஆனால் முதலாளிகளுக்கு அதிக பணம் கிடைக்கும்போது அவர்கள் புதிய முதலீடுகள் செய்வார்கள், அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்” என் கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இது தவறான வாதம் என்கிறார் பட்நாயக். ஏனெனில் முதலீடு என்பது நீண்டகால திட்டமிடலைச் சார்ந்தது. இன்று கிடைக்கும் மானியம் நாளை புதிய தொழிற்சாலைகளாக மாறிவிடாது. மேலும், தொழிலாளர்கள் தங்கள் வருமானம் முழுவதையும் நுகர்வு க்குச் செலவிடுகிறார்கள். ஆனால் முத லாளிகள் அப்படி இல்லை. எனவே தொழிலாளர்களிடமிருந்து முதலாளி களுக்கு பணம் மாற்றப்படும்போது மொத்த நுகர்வுச் செலவு குறைகிறது. இதனால் முதலாளிகளின் மொத்த லாபமும் குறையும். அப்படியானால் இந்த மானியங் களால் யார் பயனடைகிறார்கள்? பெரிய முதலாளிகள் மட்டுமே. ஏனெனில் தொழி லாளர்களின் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு முதலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் பெரு முதலாளிகளின் ஆதிக்கம் மேலும் வலுப்பெறுகிறது. எனவே பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த மானியங் கள் உண்மையில் ஏக போக முதலாளிகளின் லாபத்தை மட்டு மே பெருக்குகின்றன. பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதைச் சுருக்குகின்றன. சமூக ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கின்றன என் பதே உண்மை என்கிறார் பேராசிரியர் பட்நாயக்.